உலக சுற்றுலா தினம் ( செப்டம்பர் 27)
In English (ஆங்கிலத்தில்): https://half-boil.blogspot.in/2017/04/tour.html
பயணம் என்ற ஒன்றை மட்டும் நீங்கள் வாங்கினால், அது உங்களை பணக்காரன் ஆக்கும், சுற்றுலா தினத்தை பற்றி இந்த பதிவை எழுதும் முன் நான் படித்த ஒரு மேற்கோள். அடேய், இந்த தடவையாவது நம்மெல்லோரும் கோவா டூர் போகணும் டா என்ற கேள்வியை நம் நடப்பு வட்டாரத்தில் கேட்காமலிருந்திருக்க முடியாது, சுற்றுலா பயணம் என்ற ஒன்று அனைவரது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி முதல் வேலைசெய்யும் இடம் வரை அணைத்து இடங்களிலும் சுற்றுலா உண்டு. இடம், தேவை, காரணம் இப்படி பலவிஷயங்களை பொறுத்து பயணங்கள் மாறுபடும்.

ஒரு நாள் என்னுடைய பள்ளியில் தலைமை ஆசிரியர், அரையாண்டு விடுமுறையில் சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கிற்கு சுற்றுலா செல்லலாம் என்று சொல்லி, பயணத்திற்கு 300ரூபாய் கேட்டார், ஆனால் அந்த இடத்திற்கு என்னுடைய அப்பாவுடன் சென்று வந்துளேன், அதனால் என் அப்பா பள்ளி சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்கவில்லை. அப்பொழுது நான் எட்டாம்வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அதே சமயம் என்னுடைய நண்பன் படித்த பள்ளியில் ஊட்டி செல்ல திட்டம்மிட்டு இருந்தனர், அவன் அதற்கு சென்றான். என்னை ஏன் அனுப்பவில்லை, நான் மட்டும் இங்கு இருந்து என்ன பண்ணப்போறேன் என்று என்தந்தையிடம் கேட்டேன், நான் பாண்டி மற்றும் மதுரை வரை செல்கிறேன் நீயும் என்னுடன் வரியா என்று கேட்டார் அப்பா, எங்களுடன் என்மாமா வந்தார். நான் முன்கூறியதர் போல், அந்த பயணம் என்னை ஒரு பணக்காரன் ஆக்கியது. காரணம் அந்த ரயில் பயணத்தில் நான் கற்றுக்கொண்டது பல, ரயில் பயணம் என்றால் ஜன்னல் ஓரத்தில் ஒரு இடம், ரயில் உணவு, வேடிக்கை இப்படிதான் இருந்த என்பயணம், இயற்கை ( Landscape) என்பதை எப்படி பார்க்க வேண்டும், தமிழ் இலக்கணத்தில் மட்டும் உள்ள மற்றும் படித்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பற்றி எல்லாம் , கற்றுக்கொடுத்தார் என் மாமா.
இதற்கும், நான் பணக்காரன் ஆனதற்கு என்ன சம்மந்தம் என்றால் , அதன்பின் நான் என்னுடைய நண்பர்களுடன் சென்ற இடங்களில் என்பார்வை மாறியது,
நான் படித்த இடம் 1.விழுப்புரம், அங்கு வருடாவருடம் லட்சதீபம் என்ற திருவிழா நடைபெறும், அதில் மருதம் விழா என்ற ஒன்று நடைபெறும், ஏன் இந்த விழா என்று தெரியாத இருந்த எனக்கு அந்த பயணம், நான் இருந்த இடம் மருதத்தை சார்ந்தது என புரிந்தது. 2.குற்றாலம் மற்றும் 3 திருநெல்வேலி கல்லூரில் சேர்ந்த முதல் ஆண்டில் என்னுடைய கல்லூரி நண்பன் வீட்டிற்கு சென்றபோது , அங்கு நான் கண்ட நிலம் குறிஞ்சி வகை நான் அங்கு கண்டேன், குற்றாலம் குறிஞ்சி வகையிலும்,. 4. பாண்டி விழுப்புரம் அருகே பாண்டி , பலர்க்கு அந்த இடம் வேறுஒரு தண்ணிற்கு பெயர்பெற்றது, ஆனால் அது நெய்தல் வகையை சார்ந்தது, அதன் பின் மீன்பிடிப்பதை பார்த்தால் வேறுவிதமாக தோன்றியது. 5.மூணாறு
என்னுடைய கல்லூரி நண்பர்களுடன் சென்று இருந்தேன் அங்கு அனைவரும் அதன் அழகை ரசித்து கொண்டு இருந்தார்கள்,ஆனால் அது முல்லை நிலவகை. காடுகள் அழிக்கப்பட்டு இப்போது தேயிலை தோட்டமாக இருப்பதாக நான் நினைத்தேன்.மேல் கூறியது ஓரூ சிறிய எடுத்துக்காட்டு தான், மேலும் பயணம் ஓரூ குறிப்பிட்ட சமூகம், அவர்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள உதவும். பாலை நிலம் மட்டும் என்கண்ணில் படவில்லை, ஏனென்றால் நான் ராஜஸ்தான் செல்லவில்லை .
இடம் விட்டு இடம் சென்று அங்கும் படம் எடுத்துக்கொண்டு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு , எப்போதும் போல் வந்தால் மட்டும் தான் சுற்றுலா என்று இல்லை, இயற்கைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் சென்று வந்து . அதே இடம் அடுத்த வருடம் நமக்கு புதிய விஷயங்கள் கற்று தரும் என்று எண்ணி வரும் கோடைகால விடுமுறையை ஒரு சிறப்புமிக்க சுற்றுலா இடத்தில் கழியுங்கள் .
குறிப்பு : தமிழில் முதல்முதலில் பதிவு செய்கிறேன், மேலும் மேலே சொன்னது அனைத்தும் நான் படித்து, சென்று வந்த அனுபவங்கள் மட்டுமே.
குறிப்பு : தமிழில் முதல்முதலில் பதிவு செய்கிறேன், மேலும் மேலே சொன்னது அனைத்தும் நான் படித்து, சென்று வந்த அனுபவங்கள் மட்டுமே.
Nanbaa un payanam arivu saarnthathaa , anubavam saarnthathaa endru ennai yosikka vaikirathu... Payanathin muthal velipaadu azhagiyal saarnthathu endre enakku thondrugirathu.. intha azhagiyallil manam layikkum anubavame arivin velipaadu enbathu, en anubavathin moolam naan unarntha unmai... Un anubavathilum unmai ullathu.. aanaal athu ennai kelvi ketka thoondugirathu ... Mudinthaal yosi... Mudiyaavitaal vaasi... Dhaasiyaium anbodu nesi ... Anandham anubavamaagattum ...
ReplyDelete